| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 220825b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a உசிலம்பட்டி_குறிஞ்சிநகர் |b1 : |b2 = |
| 300 | : | _ _ |a பாறை ஓவியங்கள் |
| 500 | : | _ _ |a மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியவாறு அமைந்துள்ள வாசிமலையான் மலைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது ‘ சித்ரகல் பொடவு” எனும் பாறை ஒதுக்கு. இவ்விடம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சமீப காலம் வரை பளியர் எனும் மலைப் பழங்குடிகள் வாழ்ந்து வந்தனர். இவ்விடம் வேட்டைச் சமூகத்திற்கு உகந்த இடமாகும், அருகிலே நீர்ச் சுனையுண்டு மேலும் இது ஒரு கண்காணிப்பு கோபுரத்துக்கு ஒத்த தன்மையில் உள்ளது. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரியப்பட்டுள்ளன. ஆனால் சில ஓவியங்கள் மட்டுமே நல்ல நிலையில் உள்ளது. தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் தான் இருக்கும், ஆனால் இங்கு கருப்பு வண்ணத்திலும் ஓவியங்கள் காணப்படுகின்றன. இவ்வகையான கருப்பு வண்ண ஓவியங்கள் இம்மலைத் தொடரின் நீட்சியான பழனி மலைத் தொடர்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்கள் கோட்டோவியமாகவும் அதே சமயம் கோட்டோவியம் வரைந்து பின்னர் உள் பாகத்தை வண்ணம் நிறப்பியும் வரியப்பட்டுள்ளன. விலங்குகளின் உருவங்கள் யதார்த்தமான வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு வரையப்பட்ட ஓவியங்கள் பெரும்பாலும் நேர்த்தியான வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a சித்ரகல் பொடவு பளியர் எனும் பழங்குடி மக்களின் குடியிருப்பு பகுதியாக இருந்து வந்துள்ளது. இங்கு வசித்த தொல்குடி மக்களால் தொடர்ந்து ஓவியங்கள் வரையப்பட்டு வந்துள்ளன. பல்வேறு பறவைகள், விலங்குகள் மற்றும் மனித உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. |
| 653 | : | _ _ |a உசிலம்பட்டி, பாறை ஓவியம், பெருங்கற்காலம், மேற்கு தொடர்ச்சி மலை, யானை வேட்டை, மதுரை |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 752 | : | _ _ |a சித்ரகல் பொடவு |b # |c உசிலம்பட்டி_குறிஞ்சிநகர் |d மதுரை |f உசிலம்பட்டி |
| 914 | : | _ _ |a 9.96850561 |
| 915 | : | _ _ |a 77.7885004 |
| 995 | : | _ _ |a TVA_PNT_00005 |
| barcode | : | TVA_PNT_00005 |
| book category | : | பாறை ஓவியங்கள் |
| cover | : |
|
| Primary File | : |